வேலன்:-Excel -ல் ஓரே ஓரு செல்லை மறைக்க
இடுகையிட்டது வேலன். on வெள்ளி, 29 ஜனவரி, 2010
லேபிள்கள்: வேலன்:-Excel -ல் ஓரே ஓரு செல்லை மறைக்க.velan / Comments: (4)
எக்ஸெல்லில் ஏற்கனவே ரோ - காலம் -ஷீட்
மறைப்பதைபற்றி பதிவிட்டுள்ளேன். அந்த
பதிவை படிக்காமல் தவறவிட்டவர்கள் இங்கு
சென்று படித்துக்கொள்ளவும்.இன்றைய பதிவில்
நாம் ஒரே ஓரு செல்லை மறைப்பதைபற்றி பார்க்கலாம்.
முக்கியமான ஓரு தொலைபேசி எண்ணோ - பாஸ்வேர்ட்
டோ - அல்லது முக்கியமான ஒரு தகவலையோ இதில்
பதித்துவைத்து மறைத்து விடலாம். மற்றவர்கள்
பார்வைக்கு இது தெரியாது. மீண்டும் வேண்டுமானல்
அதை நீங்கள் மற்றவர்களுக்கு தெரியும் படி வர
வழைக்க முடியும். அதை எவ்வாறு செய்வது என
இப்போது காணலாம்.
முதலில் நீங்கள் மறைத்துவைக்க விரும்பும் செல்லை
தேர்ந்தெடுங்கள்.உங்கள் பெயரின் - இனிஷியலின் -
மனைவி - மகன் - மகள் - காதலி - என நீங்கள்
விரும்பும் பெயரின் முதல் எழுத்தை தேர்வு செய்து
கொள்ளுங்கள். அவரின் பிறந்த நாளை தேர்வு
செய்து கொள்ளுங்கள். பெயரின் எழுத்தை காலமாக
வும் - பிறந்த தேதியை ரோ வாகவும் கணக்கெடுத்து
செல்லை தேர்வு செய்யுங்கள். நான் G2 தேர்வு
செய்துள்ளேன்.கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இப்போது அதில் தேவையான தகவலை தட்டச்சு செய்யுங்கள்.
அடுத்து அந்த செல்லை தேர்வு செய்யுங்கள். பின்னர் Format Cells
விண்டோ விற்கு செல்லுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும். அதில் முதலில் உள்ள Number என்கிற
டேபை கிளிக் செய்யுங்கள்.
அதில் உள்ள Custom கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும். அதில் Type என்பதின் கீழே உள்ள
கட்டத்தில் மூன்று ; ; ; (செமிகோலன்கள்) தட்டச்சு செய்
யுங்கள். ஓகே கொடுத்து வெளியேறுங்கள்.
Thanks
http://velang.blogspot.com/2010_01_01_archive.html
Saturday, February 20, 2010
வேலன்:-Excel -ல் ஓரே ஓரு செல்லை மறைக்க
Posted by இரவிசங்கரின் at 9:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment